உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 23 பயனாளிகளுக்கு உத்தரவு; கோவை கலெக்டர் தகவல்

23 பயனாளிகளுக்கு உத்தரவு; கோவை கலெக்டர் தகவல்

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 29வது வார்டு கணபதியில் உள்ள திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பவன்குமார், கோவை எம்.பி., ராஜ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, முகாமை துவக்கி வைத்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, 12 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்கான உத்தரவு, 10 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவு, ஒருவருக்கு வீட்டுமனை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவு என, 23 பேருக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஜூலை 15 முதல் நேற்று முன்தினம் வரை மகளிர் உரிமைத்தொகை கோரி, 93 ஆயிரத்து, 385 மனுக்கள், இதர சேவைகளுக்காக, 93 ஆயிரத்து 987 மனுக்கள் என, 1 லட்சத்து 87 ஆயிரத்து 372 மனுக்கள் பெறப்பட்டுள்ளன' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை