உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உண்ணாவிரதம்: வாக்காளர் பேரவை முடிவு

உண்ணாவிரதம்: வாக்காளர் பேரவை முடிவு

கோவை : வாக்காளர் எழுச்சிப் பேரவை கூட்டம், கோவையில் நடந்தது. பேரவை மாநில அமைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். மாநில தலைவர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பள்ளிப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர்; ஒரு சதவீதத்தினர் மட்டுமே மேற்படிப்பை தொடர்கின்றனர்.அடிப்படைத் தேவையான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். மாணவர்களுக்கு கல்விக்கடன் உதவி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் ஆக., 12ம் தேதி கோவையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ