| ADDED : நவ 22, 2025 07:14 AM
பெ.நா.பாளையம்: ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியின் உடற்கல்வியியல் துறை மற்றும் இளம் இந்தியா அமைப்பு சார்பில், கோயமுத்துார் விழா தடகளப் போட்டிகள், நேற்று வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டியை, கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் மற்றும் கோயமுத்துார் விழா உறுப்பினர் அஸ்வின் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, போட்டியை சிறப்பித்தனர். மாணவ, மாணவிகளுக்காக 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பி ரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆசிரியர்களுக்காக, 100 மீட்டர், 200 மீட்டர், ஆயிரம் மீட்டர் ஓட்ட போட்டிகள், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும், இளம் இந்தியா அமைப்பின் உறுப்பினர் தாமஸ் ரெனால்ட், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.