| ADDED : நவ 22, 2025 07:12 AM
கோவை: தென் மாநில அளவில் நீர் மேலாண்மையில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்திலுள்ள கோவை மாவட்டம், இரண்டாவது சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார். சில தினங்களுக்கு முன்புடில்லி விக்யான் பவனில் நடந்த, விருது வழங்கும் விழாவில், கோவை கலெக்டர் சார்பாக, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த்வாகே விருது பெற்றார். அந்த விருதை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பவன்குமாரிடம் கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே ஒப்படைத்து, வாழ்த்து பெற்றார்.