கோவை நீதிபதி இடமாற்றம்
கோவை; தமிழ்நாடு முழுவதும், சார்பு நீதிமன்ற நீதிபதிகள் 86 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கோவை மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி தமயந்தி, தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக வேறு நீதிபதி நியமனம் செய்யப்படவில்லை. அதே போல, தமிழ்நாடு முழுவதும், சிவில் கோர்ட் நீதிபதிகள் 27 பேர், சீனியர் சிவில் நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி, இடமாறுதல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.