உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு உள்கட்டமைப்பு வசதி போதாது: தேவைகள் பற்றி தொழில்துறையினர் பட்டியல்

கோவைக்கு உள்கட்டமைப்பு வசதி போதாது: தேவைகள் பற்றி தொழில்துறையினர் பட்டியல்

கோவை; ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யும் திறனும், மாநில ஜி.டி.பி.,யில் 10 சதவீத பங்களிப்பையும் தரும், கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை என, தொழில்துறையினர் வே தனை தெரிவித்துள்ளனர். தொழில்துறையினர் கூறியதாவது: கடந்த மார்ச் வரையிலான நிதியாண்டில், கோவை மாவட்டம் சுமார் ரூ. 45 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து, ரூ.11 ஆயிரத்து 986 கோடி மதிப்பிலான சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்லாத பகுதிகளில் இருந்து, ரூ. 2,666 கோடி மதிப்பிலான ஏற்றுமதி நடந்துள்ளது. இதுதவிர, சரக்கு ஏற்றுமதி ரூ.29,763 கோடி மதிப்பில் நடந்துள்ளது. மொத்த ஏற்றுமதி சுமார் ரூ.45 ஆயிரம் கோடி. மாவட்டத்தின் ஜி.டி.பி., மதிப்பு ரூ.2.7 லட்சம் கோடி. மாநில ஜி.டி.பி.,யில் கோவை மாவட்டத்தின் பங்களிப்பு சுமார் 10 சதவீதம். தனி நபர் வருவாயில் மாநில அளவில் முதல் 5 மாவட்டங்களில் ஒன்றாக கோவை உள்ளது. கோவையை 6 தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கின்றன. இந்த ஆறு சாலைகளையும் இணைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கிழக்குப் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கம் நிறைவடையும் வரை, உடனடியாக தற்காலிக முனையம் போதுமான விமான சேவைகளுடன் ஏற்படுத்தப்பட வேண்டும். நகரத்துக்குள் இருக்கும் கோவை, கோவை வடக்கு, போத்தனூர் மூன்று ரயில் நிலையங்களும் புதிய ரயில்சேவைகளுடன், மேம்படுத்தப்பட வேண்டும். ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த பஸ் முனையம் உடனடியாக வேண்டும். திட, திரவக் கழிவு மேலாண்மையை மேம்படுத்தி, சுத்தமான நகரங்கள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் வர வேண்டும் . மெட்ரோ, பல்நோக்கு போக்குவரத்துப் பூங்கா, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், சுந்தராபுரம், காரணம் பேட்டை பகுதிகளில், மேம் பாலங்களைக் கட்ட வேண்டும். இரு அரசுகளும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, தொழில் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கோபாலன்
ஆக 12, 2025 15:40

சிங்காநல்லூர், பீளமேடு, மற்றும் வட கோவை ரயில் நிலையங்களை மேம்படுத்தி விரைவு வண்டிகள் ஒரு/இரு நிமிடங்கள் நின்று செல்லுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.போத்தனூர் ரயில் நிலையத்தை கோவை தெற்கு என்று பெயர் இட்டு ஒரு டெர்மினல் ஆக மாற்ற வேண்டும்.


Sri
ஆக 11, 2025 13:45

Encroachment needs to be cleared and road has to be widened to occupy parking and walking path. Roads are d without enough parking space / walk-in path


அப்பாவி
ஆக 11, 2025 10:33

இனிமேலும் உள்கட்டமைப்புன்னா பூமிக்கு கீழேதான் கட்டிக்கணும். எல்லா இடத்திலேயும் முதல்லே உள்கட்டமைப்பு செய்யாம வூடு, ஃபேக்டரின்னு கட்டிருங்க. பின்னாடியே வடக்கன்சை வேலைக்கு எடுத்து அவிங்க குடிசை போட்டுருவாங்க. அப்புறம் உள்கட்டமைப்பு வேணும்னா எங்கேருந்து வரும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை