உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் சிசேரியன் :முதல் குழந்தைக்கு தங்கமோதிரம்

அரசு மருத்துவமனையில் சிசேரியன் :முதல் குழந்தைக்கு தங்கமோதிரம்

பேரூர் : அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பிறந்த, முதல் பெண் குழந்தைக்கு, தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் வசதியில்லாமல் இருந்து வந்தது. இதனால், சுகப்பிரசவம் தவிர, சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறக்கும் சூழ்நிலையில் இருந்த தாய்மார்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அரசு மருத்துவமனையில் நவீன ஆபரேஷன் தியேட்டர் அமைக்கப்பட்டது. பூச்சியூர், அம்பாள் நகரைச் சேர்ந்த பார்த்திபனின் மனைவி நாகரத்தினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, அமைச்சர் வேலுமணியின் உத்தரவுப்படி, அரசு மருத்துவமனையில் முதன்முதலாக சிசேரியன் மூலம் பிறந்த பெண்குழந்தைக்கு, ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தங்க மோதிரத்தை அணிவித்தார். அப்போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் ரவி, முத்து, மருதகுட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை