உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழும் கலை பயிற்சி துவக்கம்

வாழும் கலை பயிற்சி துவக்கம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் இன்று வாழும் கலை பயிற்சி துவங்குகிறது. ரவிசங்கர் துவக்கிய வியக்தி விகாஸ் கேந்திரா தகவல் மையத்தின் சார்பில், மேட்டுப்பாளையத்தில் வாழும் கலை பயிற்சி நடக்கிறது. இதில் உடல் ஆரோக்கியத்துக்கு யோகா, பிரணாயாமம், சுதர்சன்கிரியா, தியானம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மூச்சு பயிற்சியின் மூலம் உடலையும், உள்ளத்தையும் திடப்படுத்துகிறது. மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில், இன்று, ஆக., 2 ல் இருந்து 7ம் தேதி முடிய மாலை 6 முதல் 9 மணி வரை இப்பயிற்சி வகுப்பு நடக்கிறது. வாழும் கலையின் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி ஆக., 3ல் இருந்து 7ம் தேதி முடிய, காலை 6 முதல் 8 மணிவரை நடக்கிறது. சேர விருப்பம் உள்ளவர்கள் 98422 24120, 94875 98054 ஆகிய போனில் தொடர்பு கொள்ளவும்.இத்தகவலை மேட்டுப்பாளையம் வாழும் கலை அமைப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ