உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அகல ரயில்பாதை பணி மழையால் பாதிப்பு

அகல ரயில்பாதை பணி மழையால் பாதிப்பு

பொள்ளாச்சி : கேரளப்பகுதிகளில், மழை பொழிவு, வேலையாட்கள் பற்றாக்குறையால் அகல ரயில்பாதை பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.போத்தனூர் - திண்டுக்கல் அகல ரயில்பாதை திட்டத்தில், பழநி - திண்டுக்கல் வரை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் ரயில் வெள்ளோட்டம் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பொள்ளாச்சி - பழநி, பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தட பணிகளை வேகப்படுத்தி வரும் 2012, மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில், பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தட பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த இரு மாதங்களாக கேரளப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை காரணமாக மழை பொழிவு அதிகளவில் உள்ளது. இதனால், பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தட பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கேரளப்பகுதிகளில் மழை பொழிவு உள்ளதால், பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.மழை பொழிவு குறைந்தவுடன் மீண்டும் பணிகள் துவங்கப்படும்.பொள்ளாச்சி பகுதியில் பணிகள் நிறைவு செய்தவுடன், கேரளப்பகுதிகளில் பணிகள் வேகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை