உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிச்சை எடுப்பவர்களை மீட்க கோரிக்கை

பிச்சை எடுப்பவர்களை மீட்க கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக மாற்றத்திற்கான புதிய செயல்பாட்டு இயக்கத்தின் பொள்ளாச்சி தாலுகா அமைப்பாளர் திலகவதி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுத்த மனு: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட பிச்சை எடுப்பவர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், ஊனமுற்றோரும், வயதானவர்களும் உள்ளனர். அவர்கள் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோவில் முன்பாக வயிற்றுப்பசியை போக்கிக்கொள்ள பிறரிடம் கையேந்துகின்றனர். இரவு நேரத்தில் தங்குவதற்கு இடமின்றி ரோட்டோரத்திலும், பஸ் ஸ்டாண்டினுள்ளும், கடை திண்ணைகளிலும் சுகாதாரமற்ற இடங்களில், கொசுக்கடியில் படுத்து தூங்குகின்றனர். சில நேரத்தில் பிச்சை எடுக்கும் ஆதரவற்ற பெண்கள் சமூக விரோதிகளால் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இதை வெளியில் சொல்ல முடியாமலும், தங்களை பாதுகாத்துக்கொள்ள வழியில்லாமலும் அவதிப்படுகின்றனர். பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், கோவில் வாசல்களில் சுற்றி திரிந்து பிச்சை எடுக்கும் முதியோர்களையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டு மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை