உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் நார் உற்பத்தி பாதிப்பு

மழையால் நார் உற்பத்தி பாதிப்பு

ஆனைமலை : பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கயிறு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. பொள்ளாச்சி தாலுக்காவில் 500க்கும் மேற்பட்ட கயிறு சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்ச்சாலைகளில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நார் உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் நார்களை பிரித்து எடுப்பதற்கும்,உலர வைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நார் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கயிறு உற்பத்திக்கு அரசு மானியம் அளிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு உதவியாக உள்ளது. மழையின் தாக்கம் குறைந்தால் உற்பத்தி சீராகும் வாய்ப்பு உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை