மேலும் செய்திகள்
துப்பாக்கி சுடும் போட்டி: ஆவடி போலீஸ் அசத்தல்
30-Jul-2025
கோவை; மாநில அளவில் நடந்த பணித்திறனாய்வு போட்டிகளில் பதக்கங்களை பெற்ற, கோவை போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. மாநில அளவிலான, தமிழ்நாடு காவல் பணித்திறனாய்வு போட்டிகள் சென்னையில் ஜூலை, 19ம் தேதி முதல் கடந்த, 4ம் தேதி வரை நடந்தன. மொத்தம், 23 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலம் என, 72 பதக்கங்கள், 14 சுழற் கேடயம் வழங்கப்பட்டது. புகைப்பட நிகழ்வில், கோவை மாநகர போலீஸ் முதுநிலை புகைப்பட நிபுணர் பிரசாத் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு சாம்பியன்ஷிப் சுழற்கேடயமும் வென்றார். வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவில், பெண் போலீஸ் முருகேஷ்வரி, ஒரு தங்கப்பதக்கம் வென்றார். துப்பறியும் நாய் படைப்பிரிவில், ஏட்டு மதன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். பதக்கங்களை வென்ற போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பாராட்டு தெரிவித்தார். போதைப்பொருட்களை கண்டறியும், மோப்ப நாய் டைகருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
30-Jul-2025