உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு அருகே, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லுாரி என்.எஸ்.எஸ், மாணவர்கள், மயிலேறிபாளையம் அரசுப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து, போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.கல்லுாரி முதல்வர் சுதீஷ்மணாலில் தலைமை வகித்தார். ஊர்வலத்தில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, முக்கிய சாலைகளின் வழியாக, மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்றனர்.மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. போதை கலாசாரத்தால், மாணவர்கள் பாதை மாறும் என, தெரிவிக்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முருகஸ்ரீதேவி, உதவிப்பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ