உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையில் வேர்வாடல் நோய் ஆய்வு செய்ய குழு அமைப்பு

தென்னையில் வேர்வாடல் நோய் ஆய்வு செய்ய குழு அமைப்பு

கோவை: தென்னையை வெகுவாக பாதித்துள்ள கேரள வேர்வாடல் நோய் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களை கேரள வேர்வாடல் நோய் வெகுவாக பாதித்துள்ளது. மரங்கள் பட்டுப்போய் மகசூல் பாதித்தது. ஏராளமான மரங்களை வெட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். சமீபத்தில் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தமிழகத்துக்கு வந்திருந்தபோது, விவசாயிகளைச் சந்தித்தார். அப்போது, தென்னையில் வேர்வாடல் நோய் பாதிப்பு குறித்து, விவசாயிகள் அவரிடம் முறையிட்டனர். இதையடுத்து, மத்திய வேளாண் அமைச்சகத்தின் உத்தரவின்பெயரில், தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக 6 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளா, காசர்கோடு, மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஹெப்பார், தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை இயக்குநர், தலைமை தென்னை வளர்ச்சி அலுவலர் ஹனுமந்த கவுடா, தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் நோயியில் துறை பேராசிரியர் கார்த்திகேயன், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் (பூச்சியியல்), கோவை தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் அறவாழி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நேரடி கள ஆய்வு செய் வர். நோயின் தீவிரம், கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்வர். இக்குழு, குறுகிய மற்றும் நீண்ட கால அளவில் நோய் பாதிப்புக்கான ஒருங்கிணைந்த தீர்வுகளை, மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும். 15 நாட்களுக்குள் இதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை