உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் துவங்கியது

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் துவங்கியது

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன் பாளையம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில், ஆர்.கே.எம்.வி., கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், நேற்று துவங்கின. கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் புவனேஸ்வரி துவக்கி வைத்தார். கண் பார்வையற்றோருக்கான வாலிபால் விளையாட்டு போட்டி, மன வளர்ச்சி குன்றியோருக்கான கால்பந்து போட்டி, நடக்க இயலாதவர்களுக்கான வாலிபால் போட்டி, காது கேட்காதவர்களுக்கான கபடி போட்டி, ஆகியவை தொடங்கின. காது கேட்காதவர்களுக்கான கபடி போட்டியில், தமிழக அளவில் இருந்து, 9 அணிகள், பார்வையற்றோருக்கான வாலிபால் போட்டியில், 8 அணிகள், நடக்க இயலாதவர்களுக்கான வாலிபால் போட்டியில், 7 அணிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான கால்பந்து போட்டியில், 9 அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 'லீக்' முறையில் நடந்து வருகின்றன. காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் இன்று நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை