உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்கிரஸ் ஒப்பந்ததாரர்கள் புறக்கணிப்பு; உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு

காங்கிரஸ் ஒப்பந்ததாரர்கள் புறக்கணிப்பு; உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு

கோவை; காங்., கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்களை, மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சுங்கம் அருகே ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஐ.என்.டி.யு.சி., கவுன்சில் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:கோவை மாநகராட்சியில் காங்., கட்சி ஒப்பந்ததாரர்கள் எடுக்கும் பணிகள், வேண்டுமென்றே ரத்து செய்யப்படுகின்றன. இணையதளத்தின் வாயிலாக முறையாக விண்ணப்பித்தும், மாநகராட்சி பொறியாளர் ஒருவர், அவர் சார்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு ஒருதலைபட்சமாகவும், சட்டத்துக்கு புறம்பாகவும், ஒப்பந்த பணிகளை ஒதுக்கிவருகிறார்.இவர் மாநகராட்சி 'டி' பிரிவு அலுவலர் ஒருவருடன் சேர்ந்து, ஒப்பந்த பணிகளை ரத்து செய்து வருகிறார். நாங்கள் குறைந்த விலைப்புள்ளி வைத்தாலும், அதிக விலைப்புள்ளி வைப்பவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து, மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.இதில் அதிகாரிகளிடம் லஞ்சம் விளையாடுகிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்தும் பலன் இல்லாததால், கடந்த ஜன., 28ம் தேதி தலைமை செயலருக்கு புகார் அளித்தோம். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தமிழக முதல்வரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லையேல் ஏப்., மாதத்தில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து, உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை