உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரோட்டோரத்தில் கட்டட கழிவு குவிப்பு; மலைப்பாதையில் திக்திக் பயணம்

 ரோட்டோரத்தில் கட்டட கழிவு குவிப்பு; மலைப்பாதையில் திக்திக் பயணம்

வால்பாறை: வால்பாறையில், ரோட்டில் கொட்டப்படும் மண் குவியல்களால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில், புதியதாக கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இடிக்கப்பட்ட பழைய கட்டட கழிவுகளை, லாரியில் கொண்டு வந்து பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில் சாலையோரங்களில் கொட்டுகின்றனர். வால்பாறை நகரில் அண்ணாதிடலை இடித்து, கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய ஸ்டேடியம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளில் வீணாகும் மண் மற்றும் கட்டடக்கழிவுகள் ரோட்டோரம் கொட்டப்படுகிறது. குறிப்பாக, வால்பாறை - பொள்ளாச்சி ரோடு, சோலையாறுடேம், கருமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோட்டோரத்தில், விதிமுறையை மீறி மண் மற்றும் கட்டடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. வால்பாறையில் விதிமுறையை மீறி சாலையில் கழிவு கொட்டுவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் சாலையோரங்களில் விதிமுறை மீறி மண் உள்ளிட்ட கட்டட கழிவு குவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: வால்பாறை நகரில், சமீபகாலமாக புதிய கட்டுமான பணி வேகமாக நடக்கிறது. பழைய கட்டடக் கழிவுகளை லாரி வாயிலாக எடுத்துச்சென்று, ரோட்டோரத்தில் கொட்டுகின்றனர். இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மலைப்பாதையில் மிக கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். இந்நிலையில், ரோட்டோரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் கழிவுகளால் துாசி பறந்து இடையூறு ஏற்படுத்துகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டோரத்தில் விதிமுறையை மீறி கொட்டப்படும் மண் மற்றும் கட்டடக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்களுக்கு உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி