உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை;கோவையில் கட்டட தொழிலாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர் மகா சம்மேளனம் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் கோவை தந்தி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் சமூக சட்ட நலன்களை பாதுகாக்க ஐந்து சதவீதம் நலநிதி உயர்த்தி நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். மேலும் 60 வயதான தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தது 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பி.எப்., அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.இதில் ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொது செயலாளர் தங்கவேல், மாவட்ட பொது செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை