உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி அதிகாரிகளே... எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!

மாநகராட்சி அதிகாரிகளே... எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!

கோவை: உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்ச கதைதான்... இருந்தாலும் சொல்றேன். ரோட்டோரத்துல ஒருத்தர் ஆழமா குழி தோண்டிட்டே போய்ட்டு இருந்தார். பின்னாடி ஒருத்தர் அந்தக் குழிகள மூடிட்டு வந்தாராம். அதைப் பார்த்தவங்க, 'நீங்க யாரு...எதுக்காக குழி தோண்டுறீங்க' அப்படீன்னு கேட்டாங்க. 'நாங்க அரசாங்கத்தோட பசுமை வளர்ச்சித் துறைய சேர்ந்தவங்க. மரக்கன்று நடுறது எங்க வேலை. நான் குழி தோண்டுவேன்; இன்னொருத்தர் மரக்கன்று வைப்பார்; 3வது ஆள் குழிய மூடுவார்'னு சொல்லிருக்கார். 'ஆனா, மரக்கன்று நடாமலே ஏன் மூடுறீங்க'னு கேள்வி கேட்டுருக்காங்க. அதுக்கு அவங்க, 'இன்னிக்கு மரக்கன்று நடுற ஆள் லீவ். ஆனா, எங்க வேலைய நாங்க செய்றோம்னு' சொல்லிட்டு, தொடர்ந்து குழியை தோண்டவும், மூடவுமா வேலையை 'கன்டினியூ' பண்ணியிருக்காங்க! இப்ப எதுக்கு இந்தக் கதைனு கேக்கறீங்களா...? நம்ம வாலாங்குளம் கரையில, சி.எஸ்.ஐ., சர்ச்சுக்கு பின்னால, கான்கிரீட் நடைபாதை சமீபத்துல அமைச்சாங்க. அந்த நடைபாதை ஓரத்துல, இரும்பு தடுப்பு அமைக்க, புதுசா போட்ட கான்கிரீட்டை உடைச்சு குழி தோண்டிக்கிட்டிருக்காங்க. கான்கிரீட் ரோடு போடும்போதே, அதுக்கு இரும்புத் தடுப்பும் அமைக்க திட்டம்போட்டு, ஏற்கனவே பணம் ஒதுக்கியிருப்பாங்கல்ல...? புதுசா கான்கிரீட் ரோடு போட்டு, அதை உடைச்சு ஏன் பலவீனப்படுத்தணும். சரியா திட்டம் போட்டிருந்தா, கான்கிரீட் போடும்போதே, இரும்புத் தடுப்புக்கான கட்டமைப்பையும் உருவாக்கி இருக்கலாமே. மனித உழைப்பை வீணடிச்சு, கட்டுமானப் பொருட்களை வீணடிச்சு, ஜனங்க வரிப்பணத்தை வீணடிச்சு, புதுசா போட்ட கான்கிரீட் ரோட்டையும் பலவீனப்படுத்தற, மாநகராட்சியோட பிளான் ஏதும் இல்லாத இந்த வீண் வேலையால, ஏற்படற நஷ்டத்துக்கு யார் பொறுப்பேற்கறதுங்க?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
அக் 05, 2025 13:44

தத்திங்களை உயர் அதிகாரிகளா நியமிச்சா இப்படித்தான்... தொழிலும் தெரியாது. நேர்மையும் கிடையாது.


சமீபத்திய செய்தி