தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தகுதி
கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி- வினா போட்டி நடந்தது. நீலிக்கோணம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எஸ்.ஐ.எச்.எஸ்., மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புலியகுளம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். நீலிக்கோணம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எப்' அணியின் சஞ்ஜனா, தன்ஷிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'டி' அணியின் வைத்தி, நிஷானா; 'இ' அணியின் கீர்த்தி, ஸ்ரீஜா; 'பி' அணியின் கிருத்திகா, லட்சனா; 'ஏ' அணியின் தர்ணிஷ், நிதிஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியை ராதிகா சான்றிதழ்களை வழங்கினார். எஸ்.ஐ.எச்.எஸ்.: இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'பி' அணியின் தேவதர்ஷினி, ஜானுஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'இ' அணியின் சஜன், தர்ஷனா பாலா; 'சி' அணியின் சாமுவேல் சித்ரா செல்வின், விராட் குமார்; 'எப்' அணியின் தேன்மொழி, சுருதிகா; 'டி' அணியின் முகமது ஜிப்ரான், ஹர்சித் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியர் ராஜசேகரன் சான்றிதழ்களை வழங்கினார். ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எப்' அணியை சேர்ந்த ஷபா, பவதாரணி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'பி' அணியின் மோனிக்கா, தீட்சனா; 'டி' அணியின் கவிதா, கனிகா; 'ஜி' அணியின் பிரகாஷினி, பிரியவதனி; 'ஏ' அணியின் ஜெயசூர்யா, அக் ஷயா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியை பழனியம்மாள் சான்றிதழ்களை வழங்கினார். புலியகுளம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எப்' அணியின் காவியா, பிரதிக் ஷணா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'சி' அணியின் வேதிகா, சரஸ்ரீ; 'ஜி' அணியின் பவதாரணி, சந்தியா; 'இ' அணியின் சுருதிகா, நிஹாரா ஸ்ரீ; 'எச்' அணியின் திவ்யதர்ஷினி, நவீனா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, தலைமையாசிரியை லதா சான்றிதழ்களை வழங்கினார்.