உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை சந்தையில் சுங்க ஏலம் நகர்மன்றத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்

காரமடை சந்தையில் சுங்க ஏலம் நகர்மன்றத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்

மேட்டுப்பாளையம், : காரமடை சந்தை விவகாரம் தொடர்பாக நகர்மன்ற கூட்டத்தில், பா.ஜ., மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.காரமடை நகராட்சியில் மன்ற கூட்டம் நேற்று தலைவர் உஷா தலைமையில் நடந்தது. கமிஷனர் மதுமதி முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் காரமடை அண்ணா பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி மற்றும் வாரச்சந்தையில் சுங்கம் வசூலிப்பது தொடர்பாக, ஏலம் எடுக்கப்பட்டத்திற்கு அனுமதி கோரி தீர்மானம் முன்வைக்கப்பட்டது.இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலர்கள் பேசியதாவது:-விக்னேஷ் (பா.ஜ.,):-இந்த ஏலம் தொடர்பாக முறையான விலைப்பட்டியல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சந்தையில் சுங்கம் இஷ்டத்திற்கு வசூல் செய்யப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ.3க்கு பதில் ரூ.30 வசூல் செய்யப்படுகிறது. தற்போது ஏலம் எடுக்கப்பட்டுள்ள தொகையை பார்த்தால், விவசாயிகளிடம் இதைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும். விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.தி.மு.க., கவுன்சிலர் செண்பகம்: டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, அவர்கள் பாதிக்கவில்லையா, இட்லிக்கு கூட ஜி.எஸ்.டி.,போடப்படுகிறது. பா.ஜ., ஆட்சி மோசம்.விக்னேஷ்: இந்த சபைக்கு சம்மந்தம் இல்லாத ஒன்றை பேசுகிறார். இங்குள்ள விவசாயிகள் தி.மு.க., ஆட்சியில் பாதிக்கப்படுகின்றனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.இதையடுத்து, திமுக கவுன்சிலர் ராமுகுட்டி, செண்பகம், ரவிக்குமார் உள்ளிட்டோர் பா.ஜ., கவுன்சிலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க., கவுன்சிலர் வனிதா : சந்தை விவகாரம் தொடர்பாக இதுவரை விலைப்பட்டியல் வைக்கவில்லை. வெளிப்படை தன்மை இல்லை. விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். நம் இங்குள்ள விவசாயிகளை பற்றி பேசுவோம். சந்தை விவகாரம் தொடர்பாக இவ்வளவு அவரசமாக தீர்மானம் வைக்கப்படுகிறது. ஆனால் சாக்கடை வடிகால் அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் அது குறித்த பதில் இல்லை.குருபிரசாத் (தி.மு.க.,):-எதிர்கட்சி எல்லாம் எள்ளி நகையாடும் வகையில் அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுக்க காரணம் நகராட்சி அதிகாரிகள் தான். சந்தை விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை. மீண்டும் ஏலம் நடத்தப்பட வேண்டும். இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால் தி.மு.க., ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படும். இந்த தீர்மானத்தை திருத்தி மீண்டும் விலைப்பட்டியல் வைக்கனும். தற்போது உள்ள தீர்மானத்தை நிராகரிக்கிறோம்.காரமடை அரங்கநாதர் கோவில் முன்பு அரசாங்கத்தால் ஏலம் விடப்படாத இடத்தில் காரமடை நகராட்சி சார்பாக வசூல் செய்யப்படுகிறது. இந்த பணம் எங்கே செல்கிறது. கமிஷனர் பதில் சொல்ல வேண்டும் என கவுன்சிலர்கள் சிலர் பேசினர்.கமிஷனர் மதுமதி:- நான் கூட்டத்தில் பதில் சொல்ல முடியாது எனது அலுவலகத்தில் பதில் சொல்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை