உள்ளூர் செய்திகள்

கிரைம்

57 அனாதை வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்கு குனியமுத்துார்: கோவைபுதூரிலுள்ள அபார்ட்மென்ட் பின்புறம் காலியிடம் உள்ளது. இவ்விடத்தில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் மாதக்கணக்கில் கேட்பாரற்று நிறுத்தப்படுவதாக, குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.தாமரைகண்ணன், கடந்த, மே 17 முதல் நேற்று முன்தினம் வரை கண்காணித்து, 57 வாகனங்களை பறிமுதல் செய்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. யாரும் வாகனங்களுக்கு உரிமை கோரவில்லை. வாகனங்கள் குறித்த விவரங்களை ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்