உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பயிர் சாகுபடி கணக்கெடுப்பு அடங்கல் செயலியில் பதிவேற்றம்

 பயிர் சாகுபடி கணக்கெடுப்பு அடங்கல் செயலியில் பதிவேற்றம்

உடுமலை, : உடுமலை பகுதியில், வேளாண் துறை சார்பில், பயிர் சாகுபடி பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது.வேளாண் துறை சார்பில், உடுமலை வட்டாரத்திலுள்ள, 49 வருவாய் கிராமங்களிலும், பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பினை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபைல்போனில், அடங்கல் செயலி வாயிலாக, பயிர் சாகுபடி பரப்பு பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது.உடுமலை வட்டார வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், 54 பேர் ஈடுபட்டுள்ளனர்.இப்பணியில், கிராமம் வாரியாக பயிர் சாகுபடி, சர்வே எண் வாரியாக பதிவு செய்யப்படுகிறது. பூலாங்கிணர், கணபதிபாளையம், ராகல்பாவி, குறிஞ்சேரி பகுதிகளில் இப்பணி நடந்தது.தொடர்ந்து, சின்ன வாளவாடி, பெரிய வாளவாடி, பெரிய பாப்பனுாத்து, சின்ன பாப்பனுாத்து என அனைத்து கிராமங்களிலும், அடங்கல் செயலியில், பயிர் சாகுபடி பதிவேற்றும் பணி நடக்க உள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ