உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு சேதம்; ஓட்டுனர்கள் பரிதவிப்பு

பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு சேதம்; ஓட்டுனர்கள் பரிதவிப்பு

பஸ் ஸ்டாண்ட் ரோடு சேதம் கிணத்துக்கடவு, பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பஸ் மற்றும் இதர வாகனங்கள் சிரமத்துக்கு உள்ளாகிறது. எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும். -- ராஜ்குமார், கிணத்துக்கடவு.போக்குவரத்து நெரிசல் பொள்ளாச்சி கடைவீதி, பூ மார்க்கெட் ரோடு ஆக்கிரமிப்பால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இவ்வழியில் பயணிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- டேனியல், பொள்ளாச்சி.குழாய் சேதம் கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே, மேம்பால தூணில் உள்ள மழை நீர் சேகரிப்பு குழாய் சேதம் அடைந்துள்ளது. மழை நீர் ரோட்டில் செல்பவர்கள் மீது விழுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் குழாயை மாற்றம் செய்ய வேண்டும். -- கருணாகரன், கிணத்துக்கடவு.ரோட்டில் கழிவு நீர் தாமரைக்குளம் சர்வீஸ் ரோட்டில், ஆங்காங்கே கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் அவ்வழியில் செல்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் புதிதாக கழிவு நீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். -- மதுசூதனன், கோவில்பாளையம்.பஸ் ஸ்டாண்டில் நெருக்கடி உடுமலை புதிய பஸ் ஸ்டாண்ட் இட நெருக்கடியுடன், வசதிகளின்றி காணப்படுகிறது. இதனால், பயணியர் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணன், உடுமலை.பஸ் ஸ்டாண்ட் தேவை உடுமலை அருகே திருமூர்த்திமலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. உடுமலையிலிருந்து அரசு, தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், அங்கு வாகனங்கள் நிறுத்த இடவசதியில்லை. எனவே, அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கந்தசாமி, உடுமலை.மேம்பாலம் கட்டணும்! உடுமலை கொழுமம் ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக ரயில்கள் செல்லும் போது கேட் மூடப்படுகிறது. மீண்டும் திறந்தவுடன் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு மேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவசாமி, உடுமலை.வாகனங்களால் இடையூறு உடுமலை பசுபதி வீதி டாஸ்மாக் கடை அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம், உடுமலை.நெடுஞ்சாலையில் கழிவு உடுமலை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரங்களில், குப்பை, இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது. எனவே, நெடுஞ்சாலையில் கழிவுகள் கொட்டுவோர் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கார்த்திக், உடுமலை.ஆக்கிரமிப்புகளை அகற்றணும் உடுமலை ராஜேந்திரா ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் பிறவாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உருவாகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராகவன், உடுமலை.ரோட்டோரத்தில் குப்பை கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் தனியார் கல்யாண மண்டபம் முன் நடைபாதை அருகே, அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை தூய்மை பணியாளர்கள் கவனித்து உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும். -- கிருஷ்ணன், கிணத்துக்கடவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி