உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெங்கு தினம் அனுசரிப்பு

டெங்கு தினம் அனுசரிப்பு

மேட்டுப்பாளையம் : தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு, காரமடையில் நேற்று விழிப்புணர்வு நடந்தது.பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம், டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு துறை சார்பில் 'டெங்குவைத் தோற்கடிப்பதற்கான படிகள்' என்ற கருப்பொருள் வாயிலாக இத்தினம் அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து, காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் கூறுகையில், டெங்கு தினத்தை முன்னிட்டு, காரமடையில் இந்நோய் சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.காரமடை வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது,''என்றார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !