உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறந்த பெண் விபரம் :விசாரணையில் தகவல்

இறந்த பெண் விபரம் :விசாரணையில் தகவல்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே வனப்பகுதியில், அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. சிறுமுகை, பால்காரன் சாலை அருகே, சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில், கடந்த செப். 28ம் தேதி, வனத்துறையினர் ரோந்து சென்றனர். 35 வயது மதிக்கத்தக்க, இறந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை இவர்கள் வாயிலாக அறிந்த சிறுமுகை போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படைகள் அமைத்து, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை செய்தனர். தற்போது, இறந்த பெண், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், சிறுமுகை அருகே பெத்திக்குட்டையில் உள்ள பாட்டி வீட்டிக்கு வந்து சென்றதும் உறுதியாகி உள்ளது. டி.என்.ஏ., பரிசோதனை செய்யப்பட்டு, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !