உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்ச்சி பணிகள்; மாவட்ட கலெக்டர் ஆய்வு; விரைவாக நிறைவு செய்ய அறிவுரை

வளர்ச்சி பணிகள்; மாவட்ட கலெக்டர் ஆய்வு; விரைவாக நிறைவு செய்ய அறிவுரை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட, குள்ளிச்செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 32.8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகள்; திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 32.8 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.திப்பம்பட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட குழந்தைகள் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை உட்கொண்டு சுவை, தரம் குறித்து பரிசோதித்தார்.குள்ளிச்செட்டிபாளையம் ரேஷன் கடைக்கு சென்று, மொத்த ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்ட பொருட்கள் விபரம், இருப்புள்ள அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்க வைக்கப்பட்டு இருந்த இருப்பு பொருட்களின் தரம், அளவுகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை வழங்க அறிவுறுத்தினார்.ஊரக வளர்ச்சித்துறை சார்பில், குள்ளிச்செட்டிபாளையத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா, 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று பயனாளிகளுக்கு கட்டப்படும் வீடுகளின் அளவுகள், பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம், பயனாளிகள் தேர்வு குறித்து ஆய்வு செய்தார்.வடக்கிப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின், முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் விநாயகர் நகர் பூங்காவில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி மற்றும்,14.5 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை ஆய்வு செய்தார்.அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ன் கீழ், 30.52 லட்சம் ரூபாய் மதிப்பில், திப்பம்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடப்பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை