உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவில் தைப்பூச திருவிழா: மூன்றாம் நாளில் திரண்ட பக்தர்கள்

மருதமலை கோவில் தைப்பூச திருவிழா: மூன்றாம் நாளில் திரண்ட பக்தர்கள்

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவின் மூன்றாம் நாளில், பால் குடம் மற்றும் காவடி எடுத்து பாதயாத்திரையாக, ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது. தைப்பூச தேர்த்திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று, அதிகாலை, 5:30 மணிக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, காலை, 8:00 மணிக்கு, பத்மாசனத்திலும், காலை, 11:00 மணிக்கு, கேடயத்திலும், மாலை, 5:00 மணிக்கு, ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று, அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள், பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் வந்து, சுவாமியை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி