உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சர்க்கரை நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி பிரசாரம்

 சர்க்கரை நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி பிரசாரம்

மேட்டுப்பாளையம்: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காவிட்டால், கண் பாதிப்பு ஏற்படுவது குறித்து, மேட்டுப்பாளையத்தில் மனித சங்கிலி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில், மனித சங்கிலி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கண் மருத்துவமனை செவிலியர்கள், கே.பி.எஸ்., இன்ஸ்டிடியூட் செவிலியர்கள் வரிசையாக நின்று, கையில் பதாகைகளை பிடித்து, மனித சங்கிலி பிரசாரத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை டாக்டர் கோணுகண்டி வம்சி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் மனித சங்கிலி பிரசாரத்தை துவக்கி வைத்தார். இதில், 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது, என்பதை கண்டறியும் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், கண் நரம்புகள் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது, என, மனித சங்கிலி விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி