உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீமா ஜூவல்லரியில் வைர விழா உற்சாகம்

பீமா ஜூவல்லரியில் வைர விழா உற்சாகம்

கோவை; இந்தியாவின் முன்னணி நகைக்கடை நிறுவனமான பீமா ஜூவல்லரியில், 'சீசன் ஆப் ஸ்பார்க்கிள்' எனும் வைர விழா கொண்டாட்டம் துவங்கியுள்ளது.கோவை, கிராஸ்கட் ரோடு, பீமா ஜூவல்லரியில் நடந்து வரும் இந்த வைர நகை கண்காட்சியில், வைரங்கள் மற்றும் சாலிடர்களுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வைர காரட் மதிப்பில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும், அன்கட் வைர நகைகளின் செய்கூலியில் பிளாட் 30 சதவீத தள்ளுபடி மற்றும் சாலிடர்களில் ஒரு காரட்டுக்கு, 10 சதவீதம் வரை தள்ளுபடியையும் பெறலாம்.ரூ.ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் ஒவ்வொரு தங்க நகை வாங்கினால்,காரட்டுக்கு ரூ.2,500 மதிப்புள்ள வைர கூப்பன் வழங்கப்படுகிறது. அடுத்தமுறை வைர நகை வாங்கும்போது உபயோகித்துக்கொள்ளலாம். காதணிகள், மோதிரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வைர செட் ரூ.60,000 முதல் கிடைக்கிறது. வைர நகைகள் ரூ.6,999 முதல் தொடங்குகிறது. சிறப்பு சலுகை விற்பனை, வரும் 27 வரை உள்ளது.பீமா ஜூவல்ஸின் நிர்வாக இயக்குனர் அபிஷேக் பிந்துமாதவ் கூறுகையில், 'சீசன் ஆப் ஸ்பார்க்கிள்' வாடிக்கை யாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி