மேலும் செய்திகள்
திறக்கப்படாத பயணிகள் நிழற்குடை :அரசு பணம் வீண்
10-Jul-2025
கோவை; டிஜி யாத்ராவிற்கு கோவை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளிடமிருந்து அதிக ஆதரவு கிடைத்துள்ளது. விமான நிலையங்களில் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், விரைந்து சேவை வழங்கவும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும், விமானப் போக்குவரத்து அமைச்சகம் 'டிஜி யாத்ரா' சேவையை துவங்கியது. டிஜி யாத்ரா செயலி மூலம் பயணிகளின் செக் - இன், பாதுகாப்பு மற்றும் போர்டிங் ஆகிய பல்வேறு சோதனைச் சாவடிகளில் பயணிகளின் அடையாளங்களைச் சரிபார்க்க முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தப்படுகிறது. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 20 சதவீத பயணிகள் இந்த தடையற்ற, காகிதமில்லா சேவையை பயன்படுத்துவதாக, இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்த 10 சதவீத இலக்கை விட இது அதிகம். இதன் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, கோவை விமான நிலையத்தில் டிஜி யாத்ராவிற்காக மூன்று செக்-இன் இ-நுழைவாயில்கள் உள்ளன. முனையத்திற்குள் நுழைந்த பின், பாதுகாப்பு சோதனைக்கு இரண்டு மின்-வாயில்களும், ஏறுவதற்கு ஒரு வாயிலும் உள்ளன. இவ்வசதியைப் பயன்படுத்த, பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டிஜி யாத்ரா செயலியை நிறுவ வேண்டும். தனிப்பட்ட விவரங்கள், ஆதார் போன்ற அடையாளச் சான்றுகளை வழங்கி பதிவு செய்ய வேண்டும். டிஜி யாத்ரா ஐ.டி., யை உருவாக்க ஒரு செல்பியைப் பதிவேற்ற வேண்டும். பயணத்திற்கு முன் போர்டிங் பாஸ் அல்லது இ-டிக்கெட்டை பயன்பாட்டில் பதிவேற்ற வேண்டும். கோவை விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில்,'எளிதில் ஆவணங்களை சோதனை செய்யப்படுவதாலும், காத்திருப்பு நேரம் குறைவதால் பயணிகளால் இது பெரிதும் விரும்பப்படுகிறது. அனைத்து ஆவணங்களும் ஒரே நேரத்தில் சரிபார்க்கப்படுவதால், காகித ஆவணங்களை கையில் வைத்திருக்கத் தேவையில்லை. இச்சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
10-Jul-2025