உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயனாளிகள் பட்டியல் வெளியீடு

பயனாளிகள் பட்டியல் வெளியீடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் ஊராட்சியில், அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. கோவை மாவட்டத்தில், பொள் ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.நாகூர் ஊராட்சியும், எஸ். எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபாளையம் ஊராட்சியும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளில், இலவச ஆடு பெற விருப்பமுள்ள மக்கள் ஊராட்சியில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. ஏ.நாகூர் ஊராட்சியில், 212 பேர் விண்ணப்பித்தனர். இவர்களிலிருந்து, அரசின் விதிகளுக்குட்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்ய கிராம அளவில் எட்டு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு சார்பில் மக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: ஏ.நாகூர் ஊராட்சியில் 26 பயனாளிகளும், அத்திபாளையம் ஊராட்சியில் 27 பயனாளிகளும் சேர்த்து 53 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டுள் ளது. நாளை (இன்று) நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அதிகாரிகள் முன்னிலையில் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், மக்களுக்கு தெரியும் வகையில், பட்டியல் ஒட்டப்படும். இறுதி பட்டியல் மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்பின், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர், மருத்துவர்கள், சிறந்த மூன்று பயனாளிகள் கொண்டு குழு அமைத்து ஆடு வாங்கும் பணி துவங்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை