உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்கம், வெள்ளி பொருட்கள் ஏலம் ஸ்தோத்திர பண்டிகை கோலாகலம்

தங்கம், வெள்ளி பொருட்கள் ஏலம் ஸ்தோத்திர பண்டிகை கோலாகலம்

கோவை : கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில், ஸ்தோத்திர பண்டிகை நேற்று காலை சிறப்பு ஆராதனையுடன் துவங்கியது. திருச்சபை தலைமை குரு எபினேசர் மணி சிறப்பு ஆராதனை நடத்தினார். பாதிரியார்கள் அருளானந்தம், அருண்திலக் ஆகியோர் பிரார்த்தனையில் பங்கேற்று, மறையுரை நிகழ்த்தினர். தொடர்ந்து ஸ்தோத்திர பண்டிகை விற்பனை விழா நடந்தது. தேவக்கனி பால் கந்தசாமி ரிப்பன் வெட்டி விற்பனையை துவக்கி வைத்தார்.முதல் விற்பனையை திருச்சபை தலைமை குரு வழங்க ஆசிர்வாத தட்டை ஹெலன், சுதன் அப்பாதுரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவையொட்டி,அமைக்கப்பட்டிருந்த 50 ஸ்டால்களில் இட்லி, புரோட்டா, தோசை, ஐஸ்கிரீம், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் வசூலான தொகை அனைத்தும் திருச்சபைக்கு வழங்கப்பட்டது. தங்கம், வெள்ளி, பீரோ, கட்டில், மெத்தை விரிப்புகள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக தங்க நகை 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. திருச்சபை செயலாளர் ஜெயசிங், பொருளாளர் பரமானந்தம், ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை