உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திடீர் ஆய்வு செய்தார்.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி வளாக இடத்தை மருத்துவமனைக்கு தருவது குறித்து பல்வேறு தடைகள் உள்ளன. இது குறித்து ஆராய்ந்து அதற்கு ஒரு தீர்வு கிடைக்க ஆலோசனை செய்யப்பட்டது.அரசு மருத்துவமனையில் தடையில்லாத மின்சாரம் வழங்க மருத்துவமனைக்கு தனியாக டிரான்ஸ்பார்மர் அமைக்கவும், மருத்துவமனை நெடுஞ்சாலை ரோட்டில் அமைந்துள்ளதால் அவசர சிகிச்சை பிரிவு அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கூறியதாவது:மருத்துவமனைக்கு இடம் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி கமிஷனர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கொண்டு கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு தனியாக 11 லட்சம் ரூபாய் செலவில் 'டிரான்ஸ்பார்மர்' அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்படவுள்ளது, என்றார்.அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன், டாக்டர்கள் கண்ணன் மற்றும் ராஜா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை