உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சி பா.ஜ.., வேட்பாளருக்கு 84.75 லட்சம் சொத்து

நகராட்சி பா.ஜ.., வேட்பாளருக்கு 84.75 லட்சம் சொத்து

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு பா.ஜ., வேட்பாளர் ஞானவடிவேல் விஜயராஜன் நேற்று மனுத்தாக்கல் செய்தார். பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு பா.ஜ., சார்பில் ஞானவடிவேல் விஜயராஜன் போட்டியிடுகிறார். அவர் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் வந்து, நகராட்சி தேர்தல் அலுவலர் பூங்கொடி அருமைக்கண்ணிடம் மனுத்தாக்கல் செய்தார். வேட்பாளருடன் மாவட்ட துணை தலைவர் திருவேங்கடகுமார், முன்னாள் மாநில செயலாளர் நஞ்சப்பன், பா.ஜ., நகர தலைவர் சிவப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். வேட்பாளர் தாக்கல் செய்த சொத்துமதிப்பு விபரம் :வேட்பாளரிடம் ரொக்கம் 50 ஆயிரம் ரூபாயும், காப்பீட்டு நிறுவனத்தில் 4 லட்சம் ரூபாயும் உள்ளது. வேட்பாளர் பெயரில் 25 ஆயிரம் மதிப்புள்ள டிஎன் 41 பி 9123 என்ற எண்ணுள்ள பைக்கும், பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் 4 சென்ட் இடமும், ஏ.பி.டி., ரோட்டில் 4 சென்ட் இடமும் உள்ளது. இதன் மதப்பு 80 லட்சமாகும். வேட்பாளர் பெயரில் மொத்தம் 84.75 லட்சம் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளது. வேட்பாளர் பெயரில் எந்த கடனும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி