உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் பட்டம் வினாடி - வினா எளிதாக பதிலளித்த மாணவர்கள்

 தினமலர் பட்டம் வினாடி - வினா எளிதாக பதிலளித்த மாணவர்கள்

கோவை டிச. 25-: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், பங்கேற்ற மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இப்போடிக்கு, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. பி.எஸ்.ஜி.ஆர்., 'கே' பள்ளி பீளமேடு பகுதியில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் 105 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். 'இ' அணியின் டேவிட், ரோஹித் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல்வர் ஷீலா ஸ்டீபன், இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கோவை வித்யாஷ்ரம் கோவில்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் 103 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். 'ஜி' அணியின் ஆஷி ஜியோட்லின், பூர்விதா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி தாளாளர் தேன்மொழி மற்றும் முதல்வர் நந்தினி பைய் ஆகியோர் இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆதித்யா குளோபல் பள்ளி குரும்பபாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் 98 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். 'டி' அணியின் மேகா ஸ்ரீ, கவினா ஸ்ரீ ஆகியோர் தகுதி பெற்றனர். முதல்வர் விஜயபிரபா, இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை