/   உள்ளூர் செய்திகள்   /  கோயம்புத்தூர்  /    தினமலர் நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி வரும் 28ல் நடக்கிறது                      
தினமலர் நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி வரும் 28ல் நடக்கிறது
பொள்ளாச்சி; 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி வரும், 28ம் தேதி நடக்கிறது.'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங், 2025 வழிகாட்டி நிகழ்ச்சி, பொள்ளாச்சி மாதவா இன் ேஹாட்டலில் வரும், 28ம் தேதி நடக்கிறது.கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் நேரடி விளக்கம் அளிக்கின்றனர்.