உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பேக்கரி காலி செய்வதில் தகராறு: பெண் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

 பேக்கரி காலி செய்வதில் தகராறு: பெண் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

அன்னுார்: பேக்கரியை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க., பிரமுகர் உள்பட இரு தரப்பினர் மீதும் அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சரவணம்பட்டி, எழில் நகரை சேர்ந்தவர் சந்திரன், 43. இவர் அன்னுார் அருகே வரதையம்பாளையத்தில் கடந்த ஓராண்டாக பேக்கரி நடத்தி வருகிறார். கட்டிட உரிமையாளரான அ.தி.மு.க., பிரமுகர் அர்ச்சுனன் பேக்கரியை காலி செய்யும்படி கூறியுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரன் அன்னுார் போலீசில் அளித்த புகாரில், 'எனது மனைவி சுகன்யாவை பாலியல் ரீதியாக கட்டிட உரிமையாளர் அர்ச்சுனன், அவரது மகன் மணிகண்டன், மருமகன் தர்மராஜ் ஆகியோர் தொல்லை கொடுத்து உள்ளனர். இதனால் மணமுடைந்த என் மனைவி எலிமருந்தை சாப்பிட்டு விட்டார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொல்லை அளித்த மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்தார். அன்னுார் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் அர்ச்சுனன் மகள் கலைச்செல்வி அளித்த புகாரில், சந்திரன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார். இவரது புகாரின் பேரில் சந்திரன் மீது அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு வழக்குகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை