உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரக்கிளையை வெட்டும் மின்வாரியம் முறையாக அகற்றாததால் அதிருப்தி

மரக்கிளையை வெட்டும் மின்வாரியம் முறையாக அகற்றாததால் அதிருப்தி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகளை வெட்டி, மின்வாரிய ஊழியர்கள் அப்படியே போட்டுச்செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மாதந்தோறும் மின்வாரியம் வாயிலாக மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின் ஒயர் மற்றும் கம்பிகளை உரசும் மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், நேற்று பொள்ளாச்சியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பாலக்காடு ரோட்டில், தனியார் காம்ப்ளக்ஸ் அருகே மின்ஒயர்களை உரசும் மரக்கிளையை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி சாய்த்தனர்.கீழே வாகனங்கள் நிற்பதை கூட கவனிக்காமல், சரமாரியாக வெட்டியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். வெட்டப்பட்ட மரக்கிளையை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றதால் மக்களுக்கு இடையூ ஏற்பட்டது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மின்வாரிய ஊழியர்கள், மின் ஒயர்களை உரசும் மரக்கிளைகளை வெட்டி ரோட்டில் விட்டுச் செல்கின்றனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பல நாட்கள் அங்கேயே கிடப்பதால் அப்பகுதி குப்பை கொட்டுமிடமாக மாறிவிடுகிறது.ஒரு சிலர் கவனமின்றி இரவு நேரங்களில் வரும் போது கீழே விழும் சூழலும் உள்ளது.மின்வாரிய ஊழியர்கள், மரக்கிளைகளை வெட்டும் போதே அவற்றை முறையாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தால் நகரின் துாய்மை காக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ