மேலும் செய்திகள்
சேதமடைந்த ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் அவதி
04-Jun-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் அருகே ரோட்டை ஆக்கிரமித்துள்ள முட்புதரால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.கோவிந்தாபுரத்தில் கண்ணிமாபாறை அருகே உள்ள ரோட்டில் இருந்து, நல்லியன்குட்டை மற்றும் பெரியாக்கவுண்டனூர் செல்லும் ரோட்டின் ஓரத்தில், அதிகளவு முட்புதர் வளர்ந்துள்ளது. ரோட்டின் பெரும்பகுதியை முட்புதர் செடிகள் ஆக்கிரமித்துள்ளன.இதனால், இவ்வழியாக எதிர் திசையில் வாகனங்கள் வந்தால், ஓரமாக ஒதுங்கி நிற்கவும், கடந்து செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில், இவ்வழியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர், முட்புதரால் காயமடைகின்றனர்.எனவே, இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள முட்புதரை ஊராட்சி நிர்வாகம் சார்பிலோ அல்லது நெடுஞ்சாலைத்துறை சார்பிலோ வெட்டி அகற்றம் செய்ய வேண்டும், என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
04-Jun-2025