உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கேரம் போட்டிகள்; வெற்றியாளர்கள் அறிவிப்பு

மாவட்ட கேரம் போட்டிகள்; வெற்றியாளர்கள் அறிவிப்பு

கோவை; இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை மற்றும் கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கேரம், போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், மாணவர்கள், மாணவிகள், 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகளை எதிர்கொண்டனர். கோவையில், 32 பள்ளிகளில் இருந்து, 600 மாணவர்கள் விளையாடினர். போட்டிகளில், ஒற்றையர் 14 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி அணியும், மாணவர்கள் பிரிவில் பி.ஆர்., சித்தா நாயுடு நினைவு பள்ளி அணியும் முதலிடத்தை தட்டிச்சென்றது.17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில், பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளி அணியும், மாணவர்கள் பிரிவில் பீளமேடு மாநகராட்சி பள்ளி அணியும் , 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் அணியும், மாணவர்கள் பிரிவில் ஜேசி பள்ளி அணியும் முதலிடம் வென்றது.

இரட்டையர் போட்டி

14 வயதுக்கு உட்பட்டோர் மாணவிகள் பிரிவில், ஒத்தக்கால்மண்டபம் அரசு பள்ளி அணியும், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அணியும், 17 வயது பிரிவில் அரசு ராஜவீதி துணி வணிகர் பெண்கள் பள்ளி அணியும், மாணவர்களில் பீளமேடு மாநகராட்சி பள்ளி அணியும், 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் அணியும், மாணவர்கள் பிரிவில் தெலுங்குபாளையம் வாசவி வித்யாலயா பள்ளி அணியும் முதலிடம் வென்று, வாகை சூடியது.நிறைவு விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை