உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கி.கடவு பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயிலில் பள்ளம்

கி.கடவு பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயிலில் பள்ளம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட்டுக்குள், நாள்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், பஸ் ஸ்டாண்டினுள் கடைகள் உள்ளதால், பைக்கில் அதிகம் வருகின்றனர். இதுமட்டும் இன்றி இங்கு ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் இருந்து, கோவை மற்றும் பொள்ளாச்சி செல்ல மாணவர்கள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள், என பல தரப்பட்ட மக்கள் பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர்.ஆனால், பஸ் ஸ்டாண்டில் பஸ் உள்ளே செல்லும் இடம் கடுமையாக சேதமடைந்து கரடு முரடாக காணப்படுகிறது. இதனால், பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் தடுமாறி செல்கின்றன.மேலும், நுழைவுவாயிலில் பள்ளமாக இருக்கும் இடத்தில், பஸ் மெதுவாக செல்லும் போது, இறங்க முயற்சிக்கின்றனர். இதில், பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.இருசக்கர வாகனங்களில் கடைகளுக்கு வருவோரும் நுழைவுவாயிலில் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள், பஸ் பயணிகள் நலன் கருதி பஸ் ஸ்டாண்ட் பள்ளத்தை சீரமைக்க வேண்டும், என, வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை