உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்டா வர சொல்லுங்க போஸ்டரால் தி.மு.க.,வினர் அதிருப்தி

கண்டா வர சொல்லுங்க போஸ்டரால் தி.மு.க.,வினர் அதிருப்தி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில், தி.மு.க., அரசைக்கண்டித்து, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதால், தி.மு.க., வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தல் நெருங்கும் தருவாயில் உள்ளதால், அ.தி.மு.க., ஐ.டி., விங் சார்பில் தி.மு.க., கட்சி மற்றும் அமைச்சர்கள் பற்றி 'கண்டா வர சொல்லுங்க' என்று கிணத்துக்கடவு மேம்பால தூண்கள் மற்றும் பிற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.இதனால் கிணத்துக்கடவு தி.மு.க., வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சமூக வலைதளத்தில் தி.மு.க., அமைச்சர்கள் பற்றி, 'கண்டா வர சொல்லுங்க' போஸ்டர்கள் வேகமாக பரவி வருகிறது.இதில், இந்த போஸ்டர்களை கோவை தெற்கு மற்றும் கிணத்துக்கடவு என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.மேலும், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்கள் பற்றிய போஸ்டர்களும் தி.மு.க., வினர் டிரென்ட் ஆக்கி வருகின்றனர். தற்போது கிணத்துக்கடவில், அரசியல் கட்சிகள் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த போஸ்டர்கள் பொது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை