உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தி.மு.க.,வினர் அத்துமீறல்: வேலுமணி

 வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தி.மு.க.,வினர் அத்துமீறல்: வேலுமணி

கோவை: கோவை தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமை வகித்தார். செய்தியாளர்களிடம் வேலுமணி கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொய்வாக நடக்கிறது. கோவையில் அதிக இடங்களில் தி.மு.க.,வினர், அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகின்றனர். தூய்மைப் பணியாளர்களை வைத்து, வீடுகளில் இருந்து ஒட்டுமொத்தமாக படிவங்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். நியாயமான வாக்காளர்களைப் பதிவு செய்ய வேண்டும். இல்லாத வாக்காளர்களை பதிவு செய்யக் கூடாது. எங்கள் ஓட்டுச் சாவடி முகவர்கள் கண்காணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் திட்டத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமி, கோவையில் அறிவித்து, ஆய்வு செய்ய ரூ.3 கோடி நிதி ஒதுக்கினார். அப்போது அனைத்து வழித்தடத்திலும் அறிவிக்கப்பட்டது. தி.மு.க., இரு வழித்தடங்களில் மட்டும் அறிவித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கையை, சரியான விவரங்களோடு சமர்ப்பிக்காததால்தான் அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வரும் தேர்தலில், பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதும், கோவைக்கு கண்டிப்பாக மெட்ரோ ரயில் திட்டம், அவிநாசி அத்திக்கடவு திட்டம் - 2, கொண்டு வரப்படும். இவ்வாறு, அவர் கூறினார். எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், தாமோதரன், ஜெயராம், அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை