உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் வீதிக்கு வரும் நிலையை உருவாக்கிடாதீங்க! அதிகாரிகளுக்கு மத்திய மண்டல கூட்டத்தில் எச்சரிக்கை

மக்கள் வீதிக்கு வரும் நிலையை உருவாக்கிடாதீங்க! அதிகாரிகளுக்கு மத்திய மண்டல கூட்டத்தில் எச்சரிக்கை

கோவை; 'மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலையை உருவாக்கி விடாதீர்கள்' என, கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டத்தில், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் செந்தில்குமரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, கவுன்சிலர்கள் பேசியதாவது:வார்டுகளில் குப்பை அகற்றுவதில் துாய்மை பணியாளர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சாக்கு மூட்டைகளில் குப்பையை சேகரித்து, தள்ளுவண்டிகளில் எடுத்துச் செல்கின்றனர். சில பேட்டரி வாகனங்கள் பழுது காரணமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.கெம்பட்டி காலனியில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், சுகாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.புலியகுளம் அருகே அம்மன் குளம் பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன. அப்பகுதி மக்கள் எந்த நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபடலாம். அதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேர குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ளது; விரைந்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.மண்டல தலைவர் மீனா பேசுகையில்,''மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலையை அதிகாரிகள் உருவாக்கி விடக்கூடாது. அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தர வேண்டியது அவர்களது கடமை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை