| ADDED : பிப் 28, 2024 02:15 AM
கோவை;கோவையில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 -36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என, காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 20 சதவீதமாகவும் இருக்கும். வெப்பநிலை உயர்வால், மண்ணின் ஈரப்பதமும் குறைந்து வருகிறது; மண்ணின் தன்மை பொறுத்து நீர்பாசனம் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலவும் வறண்ட வானிலையை பயன்படுத்தி, மஞ்சள் அறுவடை செய்து பதப்படுத்தி பின்னர் சந்தைப்படுத்தவும். வெப்பநிலை அதிகரிப்பதால், கால்நடை, கோழிகளுக்கு சுத்தமான, குடிநீர் போதுமான அளவு கொடுக்க வேண்டும்.கால்நடை குடில்களை சுற்றிலும், ஈரமான சாக்குகளை தொங்கவிட வேண்டும். வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.