உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரமணமுதலிபுதுார் பஸ் ஸ்டாப் நிழற்கூரையை அகற்றாதீங்க!

ரமணமுதலிபுதுார் பஸ் ஸ்டாப் நிழற்கூரையை அகற்றாதீங்க!

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ரமணமுதலிபுதுாரில் நிழற்கூரையை அகற்ற கூடாது, என, ரமணமுதலிபுதுார் முன்னாள் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி, ரமணமுதலிபுதுார் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்தகுமார் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'காந்தி பூங்கா மைதானத்தில் தி.மு.க., கிளை செயலாளர் நினைவாக நிழற்கூரை அமைக்கப்பட்டது. அங்குள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.தனியார் ஒருவர், நிழற்கூரை அகற்ற வேண்டும் என கோட்டூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்நிலையில், நிழற்கூரை அகற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை