ரோட்டோர புகையால் வாகன ஓட்டுநர்கள் அவதி
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் புகை சூழ்ந்ததால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டனர்.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு முடியும் இடத்தில், அரசம்பாளையம் பிரிவில் ரோட்டோரம் உள்ள குடியிருப்பு பகுதி அருகே, பிளாஸ்டிக் கழிவுக்கு தீ வைத்ததில் ஏற்பட்ட புகை, தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பரவியதால், வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி சென்றனர்.மேலும், சர்வீஸ் ரோட்டில் சில வாகனங்கள் 'ஒன் வே' திசையில் பயணித்ததால், வாகன ஓட்டுநர்கள் சிறிது நேரம் வாகனத்தை ரோட்டோரம் நிறுத்தி விட்டு புகை மூட்டம் கலைந்தவுடன் வாகனத்தை ஓட்டி சென்றனர்.இத்துடன், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வைத்திருப்பவர்களுக்கு புகையால் சிரமம் ஏற்பட்டது. இதே நிலை அடிக்கடி தொடர்வதால், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சுவாச கோளாறு போன்ற வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, இதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தீ வைக்கும் நபர்கள் மீது, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.