உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் பள்ளத்தால் அச்சம் ஓட்டுநர்கள் கவனமா போங்க!

ரோட்டில் பள்ளத்தால் அச்சம் ஓட்டுநர்கள் கவனமா போங்க!

வால்பாறை : வால்பாறையில், ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.வால்பாறை நகரில் இருந்து, கருமலை பாலாஜி கோவில் செல்லும் வழித்தடத்தில், பல்வேறு இடங்களில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தியன் வங்கி அருகே மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில், ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்லும் போது, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் செல்லும் பாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, ரோட்டில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்பு வைக்கபட்டுள்ளது. மழைக்கு பின் ரோடு சீரமைக்கும் பணி துவங்கப்படும். அது வரை இந்த ரோட்டில் செல்லும் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை