உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்

ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தில் ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டு வீட்டு இணைப்புகள் வழங்கப்படுகின்றன.ஆள் இறங்கும் குழிகள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு சேதமடைவதுடன், கழிவுநீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி, மழைநீருடன் கலந்து வெள்ளமாக ரோட்டில் ஓடியதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் பகுதியாக மாறி வருகின்றன. ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், கடும் துர்நாற்றமும் வீசுவதுடன், தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, ஆள் இறங்கும் குழிகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை